Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
காரமான... மட்டன் ரெசிபி
இன்று மதியம் என்ன சமையல் செய்வதென்ற யோசிக்கிறீர்களா? அசைவ உணவு சமைக்க விரும்புகிறீர்களா? அதிலும் மட்டன் ரெசிபியை முயற்சிக்க ஆசையா? அப்படியானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள மட்டன் ரெசிபியை முயற்சி செய்யுங்கள். இந்த ரெசிபியின் சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.
சரி, இப்போது அந்த மட்டன் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 750 கிராம் (சுத்தமாக கழுவியது)
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 3
கிராம்பு - 5
பிரியாணி இலை - 3
பட்டை - 1
வெங்காயம் - 5 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 5 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
தக்காளி - 6 டேபிள் ஸ்பூன் (அரைத்தது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தீயை குறைவில் வைத்து, அதில் வெங்காயத்தைப் போட்டு 2-3 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து, 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் கிளறி விடவும்.
பிறகு தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து பிரட்டி நன்கு தொடர்ச்சியாக கிளறி விட வேண்டும்.
5 நிமிடம் நன்கு கிளறியதும், அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் கிளறி, பின் 7 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் கரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து, அடுப்பில் வைத்து சிறிது நேரம் தண்ணீர் ஓரளவு சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், மட்டன் ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications