Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இறால் உருளைக்கிழங்கு கிரேவி

தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை , மல்லிதழை - சிறிதளவு
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
இறால் கிரேவி செய்முறை
முதலில் இறாலை தோல்நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதனுடன் மிளகாய் தூள், சீராகத் தூள், சோம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரமாவது ஊறவைக்கவேண்டும். உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் நீக்கி நறுக்கி வைக்கவேண்டும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும் . துருவிய தேங்காயுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடான பின்பு கறிவேப்பிலை, சோம்பு, பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிதுநேரம் வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கி நன்றாக வேகவிடவும். நறுகிய உருளைக்கிழங்கை இந்த கலவையில் போட்டு வதக்கி லேசாக உப்பு சேர்க்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.
10 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கு வெந்த பின்பு இறாலை போட்டு பிரட்டிவிடவும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைபோட்டு
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து மூடிவிடவும். சற்று நேரத்திற்கு பின் மறுபடியும் பிரட்டிவிட்டு வெந்ததும் இறக்கிவிடவும். மல்லிதழையை தூவி சிறிது நேரம் மூடிவைக்கவும். சுவையான இறால் உருளைக்கிழங்கு கிரேவி தயார். சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு இந்த இறால் உருளைக்கிழங்கு கிரேவி சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications