Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நா...ஊறும் சுவையான... மட்டன் கபாப்!!!

தேவையான பொருட்கள் :
மட்டன் கொத்துக்கறி - 1 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக் காய் பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் மட்டன், வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, வெண்ணெய், பப்பாளிக் காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின் அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
எண்ணெயானது காய்ந்ததும், அந்த கலவையை கட்லட் போல் வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மட்டன் கபாப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications