Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
பூண்டு சிக்கன் ரைஸ் ரெசிபி
விடுமுறை நாட்களில் தான் அனைத்து வீடுகளிலும் அசைவ உணவுகளின் மணம் வீசும். அப்படி அசைவ உணவுகளில் சிக்கனை செய்வதாக இருந்தால், இந்த வாரம் பூண்டு சிக்கன் ரைஸ் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இந்த ரெசிபியை செய்வது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, மிகவும் சுவையாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த பூண்டு சிக்கன் ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
பூண்டு - 2 (நறுக்கியது)
கிராம்பு - 2
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டாணி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எணணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வேண்டுமானால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைத்து, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் குடைமிளகாய், உப்பு, வினிகர் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு குக்கரில் உள்ள சிக்கனை, இத்துடன் சேர்த்து நன்கு கிளறி, தட்டு கொண்டு மூடி, 15 நிமிடம் நன்கு வேக விட வேண்டும்.
15 நிமிடம் ஆன பின்னர், அதில் சாதத்தைப் போட்டு, நன்கு பிரட்டி விட வேண்டும்.
தண்ணீரானது நன்கு வற்றிய பின்னர், அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூண்டு சிக்கன் ரைஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications