Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஃபிஷ் ரோல்

தேவையான பொருட்கள் :
மைதா சப்பாத்தி - 4
அய்கோரா/ஆவோலி மீன் - 500 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
எலுமிச்சைபழச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு பாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். பிறகு உதிர்த்த அந்த மீனில் அரைத்த வெங்காயம், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, அதில் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் மற்றம் பச்சை மிளகாய் சேர்த்து, தீயை குறைவாக வைத்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பின் அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, மறுபடியும் 1-2 நிமிடம் வதக்கவும்.
வதக்கியதும் அதில் ஊற வைத்த மீனை சேர்த்து, நன்கு பிரட்டி மீனானது வெந்தவுடன், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் கிளறி, பின் அதனை இறக்கி வைக்கவும்.
பின் அந்த கலவையை சப்பாத்தியில் தடவி, சுருட்டி வைத்தால், சுவையான ஃபிஷ் ரோல் ரெடி!!!



Click it and Unblock the Notifications