Latest Updates
-
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க
தேங்காய் பால் முட்டை குழம்பு
முட்டை குழம்பையே பலவாறு செய்வார்கள். அதில் ஒன்று தான் தேங்காய் பால் சேர்த்து செய்யும் முட்டை குழம்பு. இந்த வகை முட்டை குழம்பானது ருசியாக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். ஏன் பேச்சுலர்கள் கூட இதனை செய்யலாம்.
இங்கு தேங்காய் பால் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
முட்டை - 2
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப் (ஓரளவு கெட்டியாக)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 1
வறுத்து அரைப்பதற்கு...
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 4-5
செய்முறை:
முதலில் முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை நீக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் தேங்காய் பால், 1/4 கப் தண்ணீர் ஊற்றி, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, குழம்பானது ஓரளவு கெட்டியாக இருக்கும் போது, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி, குழம்பில் சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தேங்காய் பால் முட்டை குழம்பு ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
