Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பஞ்சாபி சிக்கன் மசாலா
பஞ்சாப் ரெசிபியானது மிகவும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் சிக்கன் ரெசிபிக்கள் இங்கு பலவாறு சமைக்கப்படும். அதில் பட்டர் சிக்கன், பாட்டியாலா சிக்கன், கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இது செய்முறையானது மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த பஞ்சாபி சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம்
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
பட்டை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் (விருப்பமான எண்ணெய்)
தண்ணீர் - தேவையான அளவு
ஸ்பெஷல் பஞ்சாபி கரம் மசாலாவிற்கு...
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பட்டை - 1
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 2
செய்முறை:
முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
கலவையானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி விட்டு, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 20 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்ததும், அதனை இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால், சூப்பரான பஞ்சாபி சிக்கன் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications