Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா
கடல் உணவுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் இறால் மிகவும் நல்லது. அத்தகைய இறாலை லீவு நாட்களில் வீட்டில் பொறுமையாக சமைத்து, ருசித்து சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போது அந்த இறால் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்ச பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் வெங்காயத்தில் பாதியைப் போட்டு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, லேசாக கொதிக்க விடவும்.
பின் அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, வேண்டுமென்றால் உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, மசாலா சற்று கெட்டியானதும் இறக்கவும்.
இப்போது சுவையான இறால் மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
