Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பெங்காலி முட்டை தட்கா தால்
முட்டை தட்கா தால் என்பது ஒரு பெங்காலி உணவு. இந்த தால் சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முட்டையை பொரியல் போன்று செய்து, அத்துடன் சேர்ப்பது தான். இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
இங்கு அந்த பெங்காலி முட்டை தட்கா தால் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 6-8 பற்கள்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வர மிளகாய் - 2
பிரியாணி இலை - 2
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை நன்கு கழுவி, அதில் மூன்று பருப்புக்களையும் நன்கு நீரில் அலசி போட்டு, தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.
அதே சமயம் 1 வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் இஞ்சி, பூண்டு மற்றும் மற்றொரு வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், பிரியாணி இலை, வர மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து வெங்காய பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள பருப்புக்களை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் முட்டையை உடைத்து உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கி விட வேண்டும்.
இறுதியில் அந்த முட்டையை பருப்பில் சேர்த்து கிளறி இறக்கினால், முட்டை தட்கா தால் ரெடி!!!



Click it and Unblock the Notifications