Latest Updates
-
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம்
பேச்சுலர்களுக்கான சிக்கன் மசாலா ரெசிபி
தற்போது பேச்சுலர்கள் அனைவரும் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சமைத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஆகவே அவர்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை ஒரு சுவையான மற்றும் ஈஸியான சிக்கன் மசாலா ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் சமையலைக் கண்டு நீங்களே அதிசயிப்பீர்கள்.
சரி, இப்போது அந்த சிக்கன் மசாலா ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
ஊற வைப்பதற்கு...
தயிர் - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்கு...
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள், பச்சை மிளகாய் பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
30 நிமிடம் சிக்கன் ஊற பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, சீரகப் பொடி, மல்லி தூள், உப்பு, சர்க்கரை, மிளகு தூள் சேர்த்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது சிக்கனில் உள்ள நீரானது வற்றியிருக்கும்.
இந்த நேரத்தில் தண்ணீரை சேர்த்து, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான சிக்கன் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications