Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
ருசியான... நீலகிரி சிக்கன் குருமா
உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? சிக்கனைக் கொண்டு அடிக்கடி பல வித்தியாசமான ரெசிபிக்கள் செய்து சுவைத்து பார்ப்பவரா? அப்படியானால் இன்று நாம் நீலகிரி சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? சிக்கனைக் கொண்டு அடிக்கடி பல வித்தியாசமான ரெசிபிக்கள் செய்து சுவைத்து பார்ப்பவரா? அப்படியானால் இன்று நாம் நீலகிரி சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த நீலகிரி சிக்கன் குருமா சப்பாத்தி, நாண், புலாவ், பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இதை செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

கீழே நீலகிரி சிக்கன் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 8
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 8-10
* பச்சை மிளகாய் - 4
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* புதினா - 15 இலைகள்
செய்முறை:
* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வதக்குவதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் மற்றும் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதன் பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தக்காளியைப் போட்டு வதக்கி, நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து, எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு கிளறி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, சிக்கனை 10 நிமிடம் வேக வைத்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான நீலகிரி சிக்கன் குருமா தயார்...
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications
