Latest Updates
-
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
நெத்திலி மாங்காய் குழம்பு
மீன்களிலேயே நெத்திலி மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இந்த குழம்புடன் மாங்காய் சேர்த்துக் கொண்டால் இன்னும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு சுவையான மீன் குழம்பு செய்ய தெரியாதா? எப்போது மீன் குழம்பு செய்தாலும், அது புளிக்குழம்பு போல் உள்ளதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. மீன்களிலேயே நெத்திலி மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இந்த குழம்புடன் மாங்காய் சேர்த்துக் கொண்டால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு நெத்திலி மாங்காய் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே நெத்திலி மாங்காய் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெத்திலி மீன் - 500 கிராம்
* துருவிய தேங்காய் - 2 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* பச்சை மிளகாய் - 5
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* புளி - ஒரு எலுமிச்சை அளவு
* பச்சை மாங்காய் - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் நெத்திலி மீனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மாங்காயை சேர்த்து வதக்கி, புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நெத்திலி மீன்களை சேர்த்து மென்மையாக கிளறி, மூடி வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான நெத்திலி மாங்காய் குழம்பு தயார்.
குறிப்பு:
* பச்சை மிளகாய்க்கு பதிலாக, வரமிளகாயை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
* பச்சை மாங்காய் இல்லாவிட்டால், சற்று புளியை அதிகமாக சேர்த்துக் கொண்டால் போதும்.
* இதில் நெத்திலி மீன் சேர்க்கப்பட்டுள்ளது. நெத்திலி மீன் இல்லாதவர்கள் வேறு எந்த மீனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications