Latest Updates
-
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம்
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க!
Mutton Gravy Recipe In Tamil: இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் பூரி, சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு மட்டன் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மட்டனைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். அதுவும் இந்த கிரேவிக்கு ஸ்பெஷலாக ஒரு க்ரீன் மசாலாவை அரைத்து சேர்த்து மட்டன் கிரேவி செய்யுங்கள். இப்படி செய்யும் கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - 1 கையளவு
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 10-12 பல்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த விழுது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மட்டன் - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய்,
இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் தயிர் சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, ஒரு முறை கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மட்டனை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மிளகுத் தூள்
சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி மிதமான
தீயில் வைத்து 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான மட்டன் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications
