Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மீந்து போன இட்லி இருக்கா? அப்ப அத தூக்கி போடாம.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டியா இருக்கும்...
Egg Idli Recipe In Tamil: காலை வேளையில் தினமும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? காலையில் சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் சுவையாகவும் ஒரு டிபன் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் நைட் சுட்ட இட்லி இருக்கிறதா? எப்போதும் இட்லி மீந்து போனால் உப்புமா தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் மீந்து போன இட்லியை தூக்கிப் போடாம, அதை வெச்சு முட்டையுடன் சேர்த்து ஒரு சுவையான மற்றும் ஹெல்த்தியான டிபனை செய்யுங்கள். இந்த டிபனுக்கு பெயர் தான் முட்டை இட்லி. இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டை இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி - 3
* முட்டை - 2
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மீந்து போன இட்லிகளை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சிறிது உப்பு சேர்த்து, கரம் மசாலா தூவி நன்கு கிளறி
விட வேண்டும்.
* அடுத்து உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து நன்கு ஒன்று சேரும்
வரை கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூளைத் தூவி நன்கு கிளறி
இறக்கினால், சுவையான முட்டை இட்லி தயார்.
Image Courtesy: Full Scoops



Click it and Unblock the Notifications