Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
Mini Aval Idli Recipe Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சுட மாவு இல்லையா? என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு அருமையான மசாலா மினி இட்லியை செய்யுங்கள். அதுவும் இந்த டிபனை செய்தால், உங்களுக்கு சைடு டிஷ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. வெறுமனே அப்படியே சாப்பிடாலாம். முக்கியமாக இந்த டிபனை 15 நிமிடத்தில் சட்டென்று செய்துவிடலாம்.

உங்களுக்கு மசாலா மினி இட்லியை எப்படி செய்தென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா மினி இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* அவல் - 1 கப்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* வேக வைத்த மினி இட்லி
* வறுத்த கருப்பு எள்ளு - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்து நீரில் 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரவை, தயிர், துருவிய தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியத் திறந்து, கைகளால் நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருட்டி, லேசாக தட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும். இதேப்
போன்று அனைத்து மாவையும் மினி இட்லிகளாக செய்து, தட்டில் வைக்க
வேண்டும்.
* பின்பு இதை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து
இறக்கி, நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின் மினி இட்லிகளை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை
சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த இட்லிகளை சேர்த்து நன்கு மசாலா இட்லியுடன்
ஒன்று சேரும் வரை கிளறி விட்டு, வறுத்த கருப்பு எள்ளு விதைகளை
சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மசாலா மினி
இட்லி தயார்.



Click it and Unblock the Notifications