Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
காலையில் மொறுமொறுன்னு சிறுதானிய ரவா தோசையை செய்யுங்க.. சுவையானதும்.. சத்தானதும் கூட...
Millet Rava Dosa Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரி தோசையை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து வாருங்கள்.
சிறுதானியங்களை கஞ்சியாக செய்து கொடுத்தால், சாப்பிட பலரும் யோசிப்பார்கள். ஆனால் அதுவே தோசையாக சுட்டுக் கொடுத்தால், அதுவும் ரவா தோசையாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று கூறாமல், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். சிறுதானிய ரவா தோசை செய்வது மிகவும் சுலபம். இதற்கு தேங்காய் சட்னி அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.

உங்களுக்கு சிறுதானிய ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்கு சிறுதானிய ரவா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்த எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* ரவா - 200 கிராம்
* சிறுதானிய மாவு - 150 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை
மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் துருவிய இஞ்சியை சேர்க்க
வேண்டும்.
* பின்னர் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டிப் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் முந்திரியை உடைத்துப் போட வேண்டும்.
* அடுத்து 1 கப் அல்லது 200 கிராம் ரவையை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் சிறுதானிய மாவு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி தோசை மாவை பதத்திற்கு நன்கு
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மாவை கிளறும் போது மாவு சற்று
கெட்டியாகியிருக்கும். இந்நிலையில் ரவா தோசை மாவின் பதத்திற்கு நீரை
ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தீயைக்
குறைத்து, மாவை அள்ளி ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்
மொறுமொறுவென்று வேக வைத்து எடுத்தால், சுவையான சிறுதானிய ரவா தோசை
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications