Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
சிறுதானியங்களை எப்பவும் கஞ்சி வெச்சு குடிக்காம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும்..
Saamai Patties Recipe In Tamil: நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? உங்களின் தினசரி காலை உணவில் சிறுதானியங்களை அதிகம் சேர்ப்பீர்களா? அதுவும் சிறுதானியங்களை எப்போதும் கஞ்சியாகத் தான் செய்து சாப்பிடுவீர்களா? இப்படி கஞ்சி சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
அப்படியானால் ஒருமுறை சிறுதானியங்களுள் ஒன்றான சாமையைக் கொண்டு ஒருமுறை கட்லெட் போன்று பாட்டீஸ் செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த சாமை பாட்டீஸை காலை உணவாகவோ அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவோ சாப்பிடலாம். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட.

உங்களுக்கு இந்த சாமை பாட்டீஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாமை பாட்டீஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாமை அரிசி - 1/2 கப்
* தண்ணீர் -1 கப்
* வேக வைத்த கொண்டைக்கடலை - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் 1/2 கப் சாமையை நீரில் 2 முதல் 3 முறை கழுவிவிட்டு, பின்
நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்த சாமையை நீரை
வடிகட்டிவிட்டு சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நீர் வற்றியதும், அதை
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு 1 கப் வேக வைத்த கொண்டைக்கடலையை ஓரளவு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பொடியாக
நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், மல்லித் தூள், மிளகாய் தூள், கடலை மாவு
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த சாமையை சேர்த்து, நீர் எதுவும் சேர்க்காமல்
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் பிசைந்த கலவையை கொஞ்சம் எடுத்து உருட்டி, கட்லெட் போன்ற
வடிவில் ஓரளவு தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து
கலவையையும் தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை போட்டு, முன்னும் பின்னும்
பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான சாமை பாட்டீஸ் தயார்.



Click it and Unblock the Notifications