Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சப்பாத்திக்கு ஏற்ற மிலிட்டரி ஹோட்டல் வெஜிடேபிள் குருமா - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Military Hotel Vegetable Kurma Recipe In Tamil: இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் டிபனாக இருக்குமா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சைடு டிஷ்ஷை செய்து கொடுத்து அசத்த நினைக்கிறீர்களா?
வீட்டில் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு வெஜிடேபிள் குருமாவை செய்யுங்கள். அதுவும் மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைலில் குருமா செய்யுங்கள். இப்படி குருமா செய்யும் போது சிக்கன் குருமாவே தோற்றுப் போகும் அளவில் ருசியாக இருக்கும். முக்கியமாக வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மிலிட்டரி ஹோட்டல் வெஜிடேபிள் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிலிட்டரி ஹோட்டல் வெஜிடேபிள் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 100 கிராம்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 5
* பச்சை பட்டாணி - 100 கிராம்
* பீன்ஸ் - 100 கிராம் (நீளவாக்கில் வெட்டியது)
* கேரட் - 100 கிராம் (நீளவாக்கில் வெட்டியது)
* உருளைக்கிழங்கு - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 லிட்டர்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி, லேசாக சூடானதும், கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சோம்பு, பட்டை, கிராம்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு
சேர்த்து 5 நிமிடம் நன்கு காய்கறிகளை பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு, கரம்
மசாலா, மிளகாய் தூள் சேர்த்து, மசாலா அனைத்தும் காய்கறிகளுடன்
சேர்ந்து, பச்சை வாசனை போக வாக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி, இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி, மூடி வைத்து, 5-8 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து, காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வேகும் முன், மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள
நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், கசகசா, சோம்பு சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* காய்கறிகள் நன்கு 8 நிமிடம் வெந்ததும், மூடியைத் திறந்து, அதில்
அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, குருமாவிற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியை சிறிது தூவி கிளறினால், சுவையான மிலிட்டரி ஹோட்டல்
வெஜிடேபிள் குருமா தயார்.



Click it and Unblock the Notifications