Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
எப்பவும் ஒரே மாதிரி பொங்கல் செய்யாம.. ஒருடைம் மிளகு அவல் பொங்கலை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Milagu Aval Pongal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வெண் பொங்கல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி வீட்டில் வெண் பொங்கலை செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் வெண் பொங்கலை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மிளகு அவல் பொங்கல் செய்யுங்கள்.
இந்த மிளகு அவல் பொங்கல் செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, சுவையானது. முக்கியமாக இதில் மிளகு தூக்கலாக இருப்பதால், குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற அற்புதமான காலை உணவும் கூட. ஒருமுறை இந்த மிளகு அவல் பொங்கலை வீட்டில் உள்ளோருக்கு செய்தால், பின் அடிக்கடி செய்து தருமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு மிளகு அவல் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு அவல் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டி அவல் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முந்திரி - 5-6
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் 1 கப் கெட்டி அவலை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
அதில் 1/2 கப் நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற
வைக்கும் போது அவல் நன்கு மென்மையாகிவிடும்.
* பின்பு 1/4 கப் பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, 2 முறை
கழுவிவிட்டு, பின் பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசிப்பருப்பை நன்கு மசித்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு மற்றும்
சீரகத்தை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில்
போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மிளகு பொடியை சேர்த்து குறைவான
தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள அவலை சேர்த்து கிளறி, அத்துடன் மசித்து
வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது சுடுநீரை ஊற்றி
கிளறி இறக்கினால், சுவையான மிளகு அவல் பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications