Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் அரிசியும், கடலைப்பருப்பும் இருந்தா டக்குனு இந்த ஆந்திரா ஸ்டைல் அடை தோசையை செய்யுங்க...சூப்பரா இருக்கும்!
Milagu Adai Dosai Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது மாலை நேர உணவாக உற்பத்தி இட்லி, தோசைதான். சொல்லப்போனால் இட்லி, தோசை இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் வாரம் முழுக்க இவற்றையே சாப்பிட முடியாதல்லவா? இட்லி, தோசை போரடிக்கும் நேரத்தில் இடியாப்பம், பணியாரம் போன்றவற்றை செய்வோம்.
இட்லி, தோசை போரடிக்கும் போது அதற்குப் பதிலாக வேறு மாவை அரைத்து வைத்து விட்டால் சுவையான ஒரு டிபனை செய்யலாம். அப்படி இட்லி, தோசைக்கு மாற்றாக செய்யகூடிய ஒரு சூப்பரான டிபன்தான் மிளகு அடை தோசை. இந்த ஆந்திரா ஸ்பெஷல் டிபன் மற்ற அடை தோசைகளை விட பிரமாதமாக இருக்கும். இந்த அடை தோசைக்கு தேங்காய் சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.

உங்களுக்கு மிளகு அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு அடை தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- புழுங்கல் அரிசி - அரை கிலோ
- கடலைப்பருப்பு - 200 கிராம்
- வர மிளகாய் - 20
- தேங்காய் - ஒன்று
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- மிளகு - ஒரு ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
- பூண்டு - 5 பல்
செய்முறை:
- தேங்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி, கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாய் மூன்றையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ஊற வைத்த அரிசி, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் இஞ்சி ஆகியவற்றை போட்டு கொரக்கொரப்பாக அரைக்கவும்.
- கடைசியாக தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும். இறுதியாக பெருங்காயத்தூளை போட்டு அரைக்கவும்.
- அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
- தாளித்ததும் மிளகு, சீரகம், 4 வர மிளகாயை கிள்ளி போட்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரியவிடவும்.
- அனைத்தும் பொரிந்ததும் தாளித்தவற்றை அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
- தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்திருக்கும் மாவை 2 கரண்டி அளவு ஊற்றி, ஊத்தாப்பம் போல மொத்தமாக ஊற்றவும்.
- அடை மொத்தமாக இருப்பதால் அடிபிடித்து விடாமல் இருக்க தீயை மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்.
- 3 நிமிடங்கள் கழித்து திருப்பி போடவும். திருப்பி போட்ட பின் மூடவேண்டாம். மேலும் 3 நிமிடங்கள் கழித்து வாணலியில் இருந்து எடுத்துவிடவும்.
- சுவையான மிளகு அடை தயார். இதற்கு தேங்காய் சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications