Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
எந்த மீன் வாங்குனாலும் இப்படி குழம்பு செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Meen Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீன் ரொம்ப பிடிக்குமா? அதனால் அடிக்கடி மீன் வாங்கி சமைப்பீர்களா? ஆனால் நீங்கள் செய்யும் மீன் குழம்பு அவ்வளவு சுவையாக இருக்காதா?
அப்படியானால் அடுத்தமுறை மீன் குழம்பு வைப்பதாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இப்படி ஒருமுறை மசாலா அரைத்து மீன் குழம்பு வைக்கும் போது, குழம்பின் சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக எந்த வகையான மீன் வாங்கினாலும் இப்படி குழம்பு வைத்தால், சுவை அள்ளும்.

உங்களுக்கு மீன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 எலுமிச்சை அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* சின்ன வெங்காயம் - 25
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு- 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
குழம்பிற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* சங்கரா மீன் - 3/4 கிலோ
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள்
சேர்த்து குறைவான தீயில் வைத்து, நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் மற்றும்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு, வெங்காயம் நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி,
புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி கிளறி, மூடி
வைத்து 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, 5 நிமிடம் எண்ணெய் பிரியும்
வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மீன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications




