Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தோசை மாவு இல்லையா? 1 கப் மீல் மேக்கர் வெச்சு இப்படி தோசை சுட்டு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்...
Mealmaker Dosa Recipe In Tamil: காலையில் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கர் கொண்டு அட்டகாசமான சுவையில் மொமொறுவென்று சூப்பரான தோசை சுடுங்கள்.
இந்த தோசையானது ரவா தோசை போன்று நன்கு சுவையாக இருக்கும். முக்கியமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமானது. இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, மல்லி சட்னி போன்றவை அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1/2 கப்
* பூண்டு - 1 பல் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
அரைப்பதற்கு...
* மீல் மேக்கர் - 1 கப்
* இஞ்சி - சிறிய துண்டு
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் மூடி
வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில்
உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மீல் மேக்கர், 1 துண்டு இஞ்சி, ரவை 1/4 கப்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் கோதுமை மாவு, பூண்டு,
சீரகம், கொத்தமல்லியை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு
நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை ரவா தோசை போன்று அள்ளி ஊற்றி, எண்ணெய் ஊற்றி,
பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான மீல்மேக்கர் தோசை
தயார்.



Click it and Unblock the Notifications
