Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
முட்டையும், பிரட்டும் இருந்தா.. காலையில் இந்த மாதிரி பிரட் டோஸ்ட் செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்..
Masala Egg Bread Toast Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? டக்கென்று காலை டிபனை முடிக்க வேண்டுமா? வீட்டில் பிரட்டும், முட்டையும் உள்ளதா?
அப்படியானால் அந்த பிரட் மற்றும் முட்டை கொண்டு அட்டகாசமான சுவையில் மசாலா முட்டை பிரட் டோஸ்ட் செய்யுங்கள். இந்த பிரட் டோஸ்ட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது சத்தானதும் கூட.

உங்களுக்கு மசாலா முட்டை பிரட் டோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா முட்டை பிரட் டோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 5
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - தேவையான அளவு
* வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ், உப்பு,
சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தட்டில் ஒரு பிரட் துண்டை வைத்து, அதன் மேல் அடித்து
வைத்துள்ள முட்டை கலவையை மெதுவாக ஊற்றி பரப்பி விட வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அல்லது தவாவை அடுப்பில் வைத்து சூடானதும்,
சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், அந்த முட்டை கலவை பரப்பிய பிரட்
துண்டின் பகுதி தவாவில் படும்படி வைத்து, பிரட்டின் மறுபுறத்தில்
முட்டை கலவையை ஊற்றி பரப்பி, மிதமான தீயில் வைத்து சிறிது நேரம்
வெந்ததும், திருப்பிப் போட்டு அழுத்தி விட்டு வேக வைத்து எடுக்க
வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் தவாவில் போட்டு
எடுத்தால், சுவையான மசாலா முட்டை பிரட் டோஸ்ட் தயார்.



Click it and Unblock the Notifications
