Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பிபி, சுகர் நோயாளிகளுக்கான ருசியான மசாலா சப்பாத்தி.. எப்படி செய்யணும்-ன்னு பாருங்க...
Masala Chapati Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று ஆரோக்கியமான அதே சமயம் சுவையான காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெந்தயக்கீரை இருந்தால், அதைக் கொண்டு மசாலா சப்பாத்தியை செய்யுங்கள்.
இந்த மசாலா சப்பாத்தி சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதை காலை உணவாக உட்கொள்ளும் போது இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த சப்பாத்திக்கு சிறந்த சைடு டிஷ் என்றால் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி தான். இந்த சப்பாத்தி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், காலையில் கூட இதை செய்யலாம்.

உங்களுக்கு மசாலா சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயக் கீரை - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* நெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு,
மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு
பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் நெய் மற்றும் 2 கைப்பிடி
வெந்தயக்கீரை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதன் மேல் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 20
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, மாவை நன்கு கைகளால் அழுத்தி
பிசைய வேண்டும்.
* பின்பு சிறிது மாவை எடுத்து உருட்டி, நன்கு மெல்லிசாக தேய்த்துக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான மசாலா சப்பாத்தி தயார். இதேப்
போன்று அனைத்து மாவையும் உருட்டி தேய்த்து சப்பாத்தியாக போட்டு
எடுங்கள்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications