Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
தித்திக்கும்... மாம்பழ அல்வா
தற்போது மாம்பழ சீசன் என்பதால் பலரும் விரும்பி சாப்பிடும் மாம்பழம் விலைக் குறைவில் கிடைக்கும். மாம்பழ சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக மாம்பழத்தைக் கொண்டு அல்வா தயாரித்தால், அதன் சுவை இன்றும் அலாதியாக இருக்கும். மாம்பழ அல்வா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு மாம்பழ அல்வா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ கூழ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* மாம்பழ கூழ் - 1 கப்
* சர்க்கரை - 1/4 கப்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 6
செய்முறை:
* முதலில் நன்கு கனிந்த மாம்பழத்தின் தசைப் பகுதியை மட்டும்
எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து, மாம்பழ கூழ் தயாரித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மாம்பழ கூழை
சேர்த்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் வைத்து தொடர்ந்து
கிளறி விட வேண்டும். சர்க்கரை கரைந்து நீர் போன்று ஆனதும், கலவையானது
சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.
* கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் 1 டீஸ்பூன் நெய்யை
அவ்வப்போது சிறிது விட்டு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* ஒரு கட்டத்தில் கவையானது பந்து போன்று ஒன்று திரண்டு வரும் போது,
அதில் மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இக்கட்டத்தில் கலவையானது அல்வா பதத்திற்கு வந்திருப்பதைக்
காணலாம்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய்
சேர்த்து சூடானதும், முந்திரி பருப்புக்களை சேர்த்து பொன்னிறமாக
வறுத்து இறக்கி, அதை மாம்பழ அல்வாவுடன் சேர்த்து கிளறினால், சுவையான
மாம்பழ அல்வா தயார்.
குறிப்பு:
* மாம்பழக் கூழ் கலவையானது அல்வா பதத்திற்கு வர குறைந்தது 20
நிமிடங்கள் ஆகும்.
* அல்வா சூடாக இருக்கும் போது பந்து போல ஆடும். ஆனால் குளிர்ந்ததும்
கெட்டியாகிவிடும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications