Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கர்நாடகா ஸ்பெஷல் மங்களூர் போண்டா ரெசிபி ... ஈஸியான செய்யுற இந்த போண்டா எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது...!
Mangalore Bonda Recipe in Tamil: மழைக்காலம் வந்தாலே தினமும் விதவிதமான நொறுக்குத்தீனிகளை சாப்பிட மனம் ஏங்கும். வழக்கமான பஜ்ஜி, வடை போன்றவற்றுக்கு பதிலாக பக்கத்துக்கு மாநிலங்களின் ஸ்பெஷல் உணவுகளை செய்து சாப்பிடுவது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அப்படி ஒரு சூப்பரான பக்கத்து மாநிலத்து தின்பண்டம்தான் மங்களூர் போண்டா.
மங்களூர் போண்டா மங்களூர் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமான சிற்றுண்டியாகும். இந்த மிருதுவான, லேசான, பஞ்சுபோன்ற மற்றும் சுவையான போண்டாக்களம் கர்நாடகம் முழுவதும் தேநீர் நேர சிற்றுண்டியாக மிகவும் விரும்பப்படுகின்றன. கர்நாடாவின் சின்ன கடைகள் முதல் மிகப்பெரிய கடைகள் வரை அனைத்துக் கடைகளிலும் இவை கிடைக்கும்.

வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இந்த மங்களூர் போண்டா இலகுவாகவும், வெளியே மொறுமொறுவென்று இருந்தாலும் உள்ளே பஞ்சுபோன்றதாகவும் மென்மையாகவும் இருக்கும். இதனை தேங்காய் மற்றும் கார சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் கணக்கில்லாமல் உள்ளே சென்று கொண்டே இருக்கும். தின்பண்டம் என்பதையும் தாண்டி இதையே டிபனாகவும் சாப்பிடலாம். இந்த சுவையான மங்களூர் போண்டாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் மைதா மாவு
- 1 டீஸ்பூன் அரிசி மாவு
- 5 ஸ்பூன் புளித்த தயிர்
- 1/2 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்
- நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 1/4 ஸ்பூன் சமையல் சோடா
- எண்ணெய் தேவையான அளவு
- மாவு பிசைய தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, சமையல் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய், கொத்தமல்லி இலை, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைக்கேற்ப சிறிய அளவில் தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவு செய்து கொள்ளவும்.
- இந்த மாவு கெட்டியாகவும், ஓட்டும் தன்மையடனும் இருக்க வேண்டும். மாவை தயார் செய்து மூடி 2 மணி நேரம் ஓரமாக வைக்கவும்.
- 2 மணி நேரத்திற்குப் பிறகு மாவை எடுத்து நன்கு கலக்கவும்.
- மாவு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும் தண்ணியாக இருக்கக்கூடாது. ஒருவேளை தண்ணியாக இருந்தால் கூடுதல் மாவு சேர்க்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காயும் வரை காத்திருக்கவும், மாவின் ஒரு சிறிய பகுதியை எண்ணெயில் இறக்கி சோதிக்கவும். இது பழுப்பு நிறமாக மாறாமல் எண்ணெயின் மேற்பரப்புக்கு வர வேண்டும். அது மூழ்கினால், எண்ணெய் போதுமான சூடாக இல்லை என்று அர்த்தம்.
- எண்ணெய் காய்ந்ததை உறுதிப்படுத்தியதும் மாவை சின்ன சின்ன உருண்டைகளாக கைகளில் எடுத்து எண்ணெயில் போடவும். அது நன்காக உப்பி வரும்வரை காத்திருக்கவும்.
- ஒரு நிமிடம் அல்லது 2 நிமிடங்களுக்கு அவற்றை வேகவிடவும். பின்னர் அவற்றை ஒரு கரண்டியால் திருப்பி, மிதமான தீயில் பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும்வரை வதக்கவும்.
- எண்ணெய் நன்கு வடியும் வரை காத்திருக்கவும்.
- இதனை தேங்காய் சட்னி மற்றும் காரா சட்னியுடன் சேர்த்து காலை உணவாகவோ, இரவு உணவாகவோ அல்லது மாலை நிற சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications