Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செஃப் அருணா ஸ்டைல் மாங்காய் ரசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Chef Aruna Vijay's Style Raw Mango Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? இதனால் தினமும் உங்கள் வீட்டில் ரசம் செய்வீர்களா? ரசத்தில் மிளகு ரசம், பூண்டு ரசம், கொள்ளு ரசம் என பல வெரைட்டிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு ரசமும் தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். உங்கள் வீட்டிலும் அடிக்கடி வெரைட்டியான ரசத்தை செய்வீர்களா?

அதுவும் தற்போது கோடைக்காலம் என்பதால் மாங்காய் விலைக் குறைவில் கிடைக்கும். இப்படி விலைக் குறைவில் மாங்காய் கிடைக்கும் போது, பலரும் அதைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்து சுவைப்பார்கள். குறிப்பாக பலர் மாங்காயை ஊறுகாய் செய்து வைத்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் மாங்காயைக் கொண்டு சாம்பார், பச்சடி, ஜாம் என்று செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் மாங்காயைக் கொண்டு ரசம் செய்துள்ளீர்களா? இல்லையென்றால் இன்று ட்ரை செய்யுங்கள். இந்த மாங்காய் ரசத்தை சூடான சாதம் மற்றும் அப்பளத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும். கோடையில் மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், மாங்காய் ரசத்தை வைத்து, அப்பளத்தை பொரித்து சாப்பிடுங்கள்.
இந்த மாங்காய் ரசம் குறித்து செஃப் அருணா விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த மாங்காய் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாங்காய் - 1
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - 2 1/2 கப்
* வெங்காயம் - 1 (சிறியது மற்றும் மெல்லியதாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கையளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் நறுக்கிய மாங்காய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து
1/2 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பின்னர் தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை
சேர்த்து சில நொடிகள் நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதை தயாரித்து வைத்துள்ள ரசத்துடன் சேர்த்து கலந்து, ரசத்தை
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மாங்காய் ரசம் தயார்.
குறிப்பு
* மாங்காயின் புளிப்புச் சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை சேர்த்துக்
கொள்ளுங்கள்.
* வேண்டுமானால் ரசத்துடன் சிறிது மிளகை தட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
இது ஒரு நல்ல ப்ளேவரையும், சுவையையும் தரும்.



Click it and Unblock the Notifications