Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Malli Pongal Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதான காலை உணவாக இருக்கும். தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் நாளை வெண்பொங்கல் செய்யுங்கள். அதுவும் வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ட்ரெண்டிங்கில் இருக்கும் மல்லிப் பொங்கலை முயற்சி செய்து செய்யுங்கள்.

இந்த ஸ்டைல் மல்லிப் பொங்கல் வாயில் வைத்ததும் நழுவி உள்ளே செல்வது போன்று இருக்கும். மேலும் இது ஹோட்டலில் கொடுப்பது போன்று அட்டகாசமான சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் பொங்கலை செய்தால், அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இந்த பொங்கலுக்கு சைடிஷ் கூட தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம்.
உங்களுக்கு சுவையான மல்லிப் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லிப் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - 1 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- தண்ணீர் - 4 கப்
- கொத்தமல்லி - 1 கட்டு
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- எலுமிச்சை சாறு - கால் ஸ்பூன்
- தண்ணீர் 1 கப்(அரைக்க)
- கடலை எண்ணெய் - 1/2 ஸ்பூன்
- உப்பு 1/2 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
தாளிக்க:
- நெய் - 2 ஸ்பூன்
- முந்திரி - 10
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை:
- அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, 30 நிமிடங்கள் ஒன்றாக ஊறவைக்கவும்.
- கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில், ஊறவைத்த அரிசி மற்றும் பருப்புடன் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- ️அரைத்து வைத்துள்ள மல்லி கலவையைச் சேர்த்து, கொதிக்க
விடவும்.
️
- கடலை எண்ணெய், உப்பு மற்றும் அரை ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக்
கலக்கவும்.
- ️குக்கரை மூடி, மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
-️ பிரஷர் வெளியேறியதும் குக்கரைத் திறந்து, பொங்கலை நன்றாக மசித்து மென்மையான பதத்திற்குக் கொண்டுவரவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும். அதில் முந்திரி மற்றும் மிளகு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- சீரகம், கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- தாளித்த இந்தக் கலவையை பொங்கலின் மீது ஊற்றி மெதுவாகக் கலக்கவும்.
- காரமான தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
