Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஹோட்டல் வெண் பொங்கல் ருசியா இருப்பதன் ரகசியம் இதான்.. தெரிஞ்சுகிட்டு நீங்களும் ட்ரை பண்ணுங்க..
Malli Pongal Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை வெண் பொங்கல் செய்யுங்கள். அதுவும் வெண் பொங்கலை செய்தால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்காதா? அப்படியென்றால் அந்த வெண் பொங்கலை ஹோட்டல் ஸ்டைலில் செய்து கொடுங்கள்.
அதுவும் ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கல் சுவையின் ரகசியம் தெரிந்து அப்படி செய்தால், நிச்சயம் வீட்டில் உள்ளவர்கள் போட்டு போட்டு சாப்பிடுவார்கள். கீழே அந்த ஹோட்டல் வெண் பொங்கல் சுவையின் ரகசியம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்து ட்ரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் மல்லி பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 டம்ளர்
* பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
* தண்ணீர் - 4 டம்ளர்
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முந்திரி - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னிக்கு...
* துருவிய தேங்காய் - சின்ன மூடி
* பச்சை மிளகாய் - 4
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - 1 இன்ச்
* தண்ணீர் - தேவையான அளவு
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் கொத்தமல்லியை சேர்த்து, 1/2 கப் நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் 1 கப் பச்சரிசி மற்றும் 1/2 கப்
பாசிப்பருப்பை சேர்த்து நீரில் 1 முறை கழுவிவிட்டு, பின் அதில் 4 கப்
நீரை ஊற்றி, அத்துடன் அரைத்த மல்லியையும் சேர்த்து கலந்து, குக்கரை
மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நெய்
ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை
மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு முந்திரி மற்றும் பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து இறக்கி, அந்த சூடான நெய்யுடன் 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூளையும் சேர்த்து கலந்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்க்க
வேண்டும். இந்த மஞ்சள் பொங்கலுக்கு தனி நிறத்தை கொடுப்பதோடு,
சுவையையும் தரும். இதான் ஹோட்டல் பொங்கலின் ரகசியம்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நெய் ஊற்றி
நன்கு கிளறி விட வேண்டும். இப்போது மல்லி பொங்கல் தயார்.
* அடுத்து சட்னிக்கு, மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை
மிளகாய், பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு, 1 இன்ச் இஞ்சி மற்றும்
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் அரைத்த சட்னியை எடுத்து, நீர் சற்று அதிகமாக ஊற்றி
கலந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக சட்னி தாளிக்க, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
தேங்காய் சட்னி தயார். மல்லி பொங்கலுக்கு இந்த தேங்காய் சட்னியை
சேர்த்து சாப்பிடும் போது சுவை அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications