Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 பாக்கெட் மேகி வெச்சு ஒருடைம் தோசை செஞ்சு பாருங்க.. ரவா தோசையே தோத்துப்போயிடும்..
Maggi Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் வீட்டில் தோசை மாவு தீர்ந்துவிட்டதா? பொதுவாக வீட்டில் இப்படியான சூழ்நிலைகளில மேகி இருந்தால் அதை செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த மேகியைக் கொண்டே சூப்பரான தோசை சுடலாம் தெரியுமா?
அதுவும் இந்த மேகி தோசையானது ரவா தோசையையே தோற்கடிக்கும் அளவில் மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வதற்கு ஒருசில பொருட்களே போதுமானது. காலையில் டக்கென்று ஒரு டிபன்செய்ய நினைத்தால், இந்த மேகி தோசையை செய்யலாம். குறிப்பாக இந்த மேகி தோசையை வெறுமனே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

உங்களுக்கு மேகி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மேகி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மேகி - 1 பாக்கெட்
* அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* ரவை - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மேகி மசாலா
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மேகியைப் போட்டு நன்கு மென்மையாக
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் சில்லி ப்ளேக்ஸ், சுவைக்கேற்ப உப்பு, மேகி மசாலா, சிறிது
நறுக்கிய கொத்தமல்லி, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை அள்ளி ரவா தோசைக்கு ஊற்றுவது போன்றே ஊற்ற
வேண்டும்.
* பின் அதன் மேல் எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால்,
சுவையான மேகி தோசை தயார். இந்த தோசையை திருப்பிப் போட்டு வேக வைக்க
வேண்டுமென்ற அவசியம் இல்லை.



Click it and Unblock the Notifications