Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: மதுரை மட்டன் கறி தோசை - சிம்பிளா ஈஸியா எப்படி செய்றது-ன்னு தெரியுமா?
Madurai Special Mutton Kari Dosa Recipe In Tamil: விடுமுறை நாட்களில் காலையில் லேட்டா எழுந்தாலும் மூன்று வேளையும் ஸ்பெஷலா சாப்பிட நீனைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு உள்ளதா? அப்படியானால் காலையில் மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசையை செய்து சாப்பிடுங்கள்.
இந்த மட்டன் கறி தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த தோசைக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது. வேண்டுமானால் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

உங்களுக்கு மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் கறி மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - சிறிது
* மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ
* தண்ணீர் - சிறிது
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தோசைக்கு...
* முட்டை - 2
* தோசை மாவு - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய தக்காளி மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன்பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள்
தூள், மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க
வேண்டும்.
* பின்பு மட்டன் கொத்துக்கறியை கழுவி சேர்த்து, 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து மட்டனை 10 நிமிடம்
மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கரம் மசாலா மற்றும்
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கொத்துக்கறி மசாலா தயார்.
* பின் ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி தோசை மாவை
ஊற்றி, ஊத்தாப்பம் போன்று தடிமனாக ஊற்றி, அதன் மேல் சிறிது முட்டையை
ஊற்றி, பின் கறி மசாலாவை பரப்பி, எண்ணெய் ஊற்றி, தோசைக்கரண்டியால்
மசாலாவை அழுத்திவிட்டு, பின் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால்,
சுவையான மதுரை ஸ்பெஷல் கறி மசாலா தோசை தயார்.



Click it and Unblock the Notifications