Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க..
Lunchbox Recipes In Tamil: கோடை விடுமுறை முடிந்து ஸ்கூல் திறக்கப்போகிறார்கள். இதுவரை லன்ச் பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்பது பற்றி யோசிக்காமல் ஜாலியாக இருந்திருப்பீர்கள். இனிமேல் ஒவ்வொரு நாளும் லன்ச்பாக்ஸில் என்ன கொடுப்பது என்று தனியாக யோசிக்க நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

அதுவும் உங்கள் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான ரெசிபிக்களை எதிர்பார்ப்பார்களானால், நிச்சயம் கூடுதலாகவே நேரத்தை செலவிட நேரிடும். தற்போது மாங்காய் சீசன் என்பதால், கொத்தமல்லியையும், மாங்காயையும் கொண்டு ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுங்கள்.
இந்த சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு வறுவலை செய்யுங்கள். இந்த காம்போவை ஒருமுறை உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்து பாருங்கள், பின் நிச்சயம் வாரம் ஒருமுறை இதை செய்ய சொல்லிக் கேட்பார்கள்.
இந்த கொத்தமல்லி மாங்காய் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கொத்தமல்லி மாங்காய் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி மாங்காய் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி மாங்காய் சாதத்துக்கு...
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* துருவிய மாங்காய் - 3/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த விழுது
* வடித்த சாதம் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
உருளைக்கிழங்கு வறுவலுக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உருளைக்கிழங்கு - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வெள்ளையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, 1 கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து லேசாக
சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய மாங்காயை சேர்த்து, அதையும் 2-3 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து தீயைக் குறைத்து, அதில் அரைத்ததை சேர்த்து சிறிது நேரம்
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வடித்து குளிர வைத்துள்ள சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான
கொத்தமல்லி மாங்காய் சாதம் தயார்.
* அடுத்து சைடு டிஷ் செய்ய, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் 1/4
டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி
வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து
நன்கு கிளறி, திறந்து வைத்து 5 நிமிடம் நன்கு மொறுமொறுவென்று வேக
வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications