Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அத தூக்கி போடாம.. இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்..
Leftover Roti Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அப்படி இரவு செய்யும் சப்பாத்தி நிறைய மீந்துவிட்டதா? அப்படி மீந்து போன சப்பாத்தியை எப்போதும் காலையில் வெறுமனே சூடேற்றி தான் சாப்பிடுவீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை மீந்து போன சப்பாத்தி இருந்தால், அதை தூக்கிப் போடாமல் அல்லது வெறுமனே சாப்பிடாமல், காலையில் அதைக் கொண்டு அருமையான சுவையில் தோசை சுட்டு மொறுமொறுவென்று சாப்பிடுங்கள். இந்த தோசை மிகவும் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த தோசைக்கு சாம்பார், சட்னி பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும்.

உங்களுக்கு மீந்து போன சப்பாத்தியைக் கொண்டு எப்படி தோசை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சப்பாத்தி தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன ரொட்டி - 1-3
* ரவை - 1/4 கப்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3-4 கப்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மீந்து போன சப்பாத்திகளை கைகளால்
பிய்த்து ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் ரவை, 2 டேபிள் ஸ்பூன் தயிர், 2 பச்சை மிளகாய்,
சிறிய துண்டு இஞ்சியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன்
சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் மீதமுள்ள 1-2 கப்
நீரை ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் மற்றும் பொடியாக
நறுக்கிய கொத்தமல்லியை சிறிது தூவி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு நாண்ஸ்டிக் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்
சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக அள்ளி ஊற்றி, மேலே சிறிது
எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால்,
மொறுமொறுப்பான தோசை தயார்.



Click it and Unblock the Notifications