Latest Updates
-
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட
கொங்குநாடு வெற்றிலை சாதம் ரெசிபி... இந்த ஆரோக்கியமான சாதத்தை டக்குனு செய்யுங்க... சுவையானதும் கூட...!
Kongunadu Vetrilai Satham Recipe in Tamil: தினமும் சாம்பார், புளிக்குழம்பு என்று சமைத்து போரடித்துவிட்டதா? சட்டென்று சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் வாய்க்கு ருசியாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு எளிதான சமையலை செய்ய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் வெற்றிலை இருந்தால், அதைக் கொண்டு ஒரு வெரைட்டி ரைஸ் செய்யுங்கள்.
இந்த வெற்றிலை சாதம் கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும். இது ஆரோக்கியமானது, நறுமணமானது மற்றும் மிகவும் சுவையானது. வெற்றிலை மிளகு போல காரமான சுவை கொண்டது, மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இந்த சாதத்தை செய்வதற்கு ஒரு ஸ்பெஷல் அரைத்த மசாலா தேவைப்படுகிறது, இது சாதத்தின் சுவையை மேலும் அதிகரிக்கிறது.

வெற்றிலையில் வைட்டமின் சி, பி வைட்டமின்கள் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன, மேலும் இது கால்சியத்தின் மிகச் சிறந்த மூலமாகும். அனைத்து தென்னிந்திய விருந்துகளிலும், விருந்துக்குப் பிறகு வெற்றிலை வழங்கப்படுகிறது, இதன் மூலம் உடலில் கால்சியம் உட்கொள்ளல் அதிகரிக்கிறது மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது. வெற்றிலையை வைத்து சாதம் செய்யும் போது அதனால் நிறைய நன்மைகள் கிடைக்கக்கூடும்.
உங்களுக்கு ஆரோக்கியமான வெற்றிலை சாதத்தை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெற்றிலை சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 5 வெற்றிலை
- 2 கப் சமைத்த சாதம்
- 10 பல் பூண்டு, நசுக்கியது
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு
- 1/2 தேக்கரண்டி உடைத்த உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 கப் வறுத்த வேர்க்கடலை
- 10 முந்திரிப் பருப்புகள்
- 4 வர மிளகாய்
- தேவையான அளவு உப்பு
மசாலா அரைக்க:
- 1 ஸ்பூன் சீரகம்
- 1ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் கருப்பு மிளகு
- 2 ஸ்பூன் எள்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- கொங்கு நாடு வெற்றிலை சாதத்தைத் செய்ய முதலில் அரிசியை போதுமான அளவு தண்ணீர் மற்றும் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒன்றோடொன்று ஒட்டாமல் வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் மசாலா தயாரிக்கத் தொடங்கவும்.
- ஒரு கடாயில் சீரகம், சோம்பு, மிளகு மற்றும் எள் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். கறிவேப்பிலையைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வறுக்கவும். அது முழுமையாக ஆறியதும், கொரகொரப்பான தூளாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும்.
- பருப்புகள் பொன்னிறமானதும், கறிவேப்பிலை, உடைத்த வர மிளகாய், வேர்க்கடலை மற்றும் முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.
- முந்திரி மற்றும் வேர்க்கடலை பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நசுக்கிய பூண்டைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் வெற்றிலைகளைத் தோராயமாக கிழித்து, கடாயில் சேர்த்து, இலைகள் சுருங்கும் வரை வதக்கவும்.
- அதன்பின் அரைத்த மசாலாப் பொடியைச் சேர்த்து, அனைத்து பொருட்களையும் ஒரு நிமிடம் நன்கு கிளறவும்.
- அடுப்பை அணைத்து, சமைத்த சாதத்துடன் தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
- உப்பை சரிபார்த்து நன்றாக கிளறினால் ஆரோக்கியமான கொங்கு நாடு வெற்றிலை சாதம் ரெடி.



Click it and Unblock the Notifications
