Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
உடல் எடையை மடமடவென்று குறைக்க உதவும் கொள்ளு பணியாரம் - எப்படி செய்றது-ன்னு பாருங்களேன்!
Kollu Paniyaram Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உடலுக்கு வலு சேர்க்கும் ஒரு சத்தான காலை உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொள்ளு உள்ளதா?
அப்படியனால் அந்த கொள்ளு கொண்டு ஸ்பெஷலாக மாவை அரைத்து, பணியாரம் சுட்டு சாப்பிடுங்கள். இந்த கொள்ளு பணியாரம் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற ஒரு அருமையான காலை உணவு. முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியானது. இதற்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு கொள்ளு பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து அரைப்பதற்கு...
* கொள்ளு - 1 1/2 கப்
* மாவு பச்சரிசி - 1 கப்
* இட்லி அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 3/4 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு , மாவு பச்சரிசி, இட்லி இரிசி,
உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை எடுத்து, 2-3 முறை கழுவிக்
கொள்ள வேண்டும். பின் அதில் நீரை ஊற்றி குறைந்தது 6-7 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* 6-7 மணிநேரம் கழித்து, மிச்சர் ஜாரில் ஊற வைத்த கொள்ளுவை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்ற சூடனதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் வதக்கியதை அரைத்த மாவுடன் சேர்த்து, நன்கு கலந்து விட
வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய்
சிறிது ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, வேக வைத்து
எடுத்தால், சுவையான கொள்ளு குழிப் பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications