Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
கொள்ளுடன் மிளகு சேர்த்து இந்த மாதிரி சூப் வைச்சு குடிங்க... எடை குறைஞ்சு உடம்பு இரும்பு மாதிரி மாறிடும்...!
Kollu Milagu Soup Recipe in Tamil: பொதுவாகவே சூப் வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை ஆரோக்கியமாக கரைக்க உதவும். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது முன்னோர் வாக்கு.
உடல் எடையை ஏற்ற எள்ளும் உடல் எடையை குறைக்க கொள்ளும் பயன்படும் என்பதே அதன் அர்த்தம். நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து சாப்பிடலாம். அதுவும் கொள்ளு ரசத்தை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அதை சூப்பாகவும் குடிக்கலாம். முக்கியமாக கொள்ளு சூப்பை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.

சூப்பை வழக்கமான சூப்பாக வைக்காமல் மிளகு சேர்த்து மிளகு சூப்பாக வைத்தால் அதன் நன்மைகளை பலமடங்கு அதிகரிக்கும். உங்களுக்கு மிளகு கொள்ளு சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு கொள்ளு சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கொள்ளு - அரை கப்
- தக்காளி - 3
- எலுமிச்சம்பழச் சாறு - அரை டேபிள்ஸ்பூன்
- மல்லித்தழை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள்:
- மிளகு - ஒரு டீஸ்பூன்
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- பூண்டு - 2 பல்
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- முதல் நாள் இரவே கொள்ளை இரண்டு அல்லது மூன்று முறை அலசி ஊறப்
போடவும். அல்லது குறைந்தது 5 அல்லது 6 மணி நேரம் ஊற விடவும்.
- பின் கொள்ளை குக்கரில் சேர்த்து அதனுடன் 3 கப் தண்ணீரை சேர்த்து வேக
விட்டு, தண்ணீரை தனியே வடித்து எடுத்துக் கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகத்தை சேர்த்து நன்கு மைய அரைத்ததும், அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு பல்ஸ் கொடுத்து எடுத்து கொள்ளவும்.
- தக்காளியை நன்றாக கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின்னர் அதில் தனியாக அரைத்த விழுது சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கவும்.
- பின் கொள்ளு வேக வைத்த தண்ணீரை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- பின்னர் அதனை வடிகட்டி எலுமிச்சைச் சாறு, மல்லித்தழை, மிளகு தூள் சேர்த்து கிளறினால் சுவையான மிளகு கொள்ளு சூப் தயார்.



Click it and Unblock the Notifications
