Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்
Kolhapuri Egg Curry Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான கோலாப்பூரி முட்டை மசாலாவை செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக இருக்கும். மேலும் இந்த முட்டை மசாலாவை செய்வது மிகவும் சுலபம்.

இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த முட்டை மசாலா வழக்கமான முட்டைக்குழம்பு போல இருக்காது, இதன் செய்முறையே கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இந்த முட்டை மசாலா நார்த் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாகும். நம்மூரிலும் பல ரெஸ்டாரண்ட் மற்றும் தாபாக்களில் இது பிரபலமான உணவாகும். ஒருமுறை இந்த முட்டை மசாலாவை செய்து விட்டால் அதன்பிறகு அடிக்கடி இதைத்தான் செய்வார்கள்.
உங்களுக்கு கோலாப்பூரி முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோலாப்பூரி முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோலாப்பூரி மசாலா செய்யத் தேவையானவை:
- ஒன்றரை ஸ்பூன் தனியா
- 1 ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் மிளகு
- 2 வர மிளகாய்
- கால் ஸ்பூன் வெந்தயம்
- 1 துண்டு பட்டை
- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
- 1 ஸ்பூன் கசகசா
- கால் கப் துருவிய தேங்காய்
- 1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 1 தக்காளி (நறுக்கியது)
முட்டை மசாலா செய்ய:
- 4 வேகவைத்த முட்டைகள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- ஒரு கடாயில் 1½ ஸ்பூன் மல்லி விதைகள், 1 ஸ்பூன் சீரகம், 2 கிராம்பு, 2 ஏலக்காய், 1 துண்டு பட்டை, வெந்தயம், ¼ ஸ்பூன் மிளகு மற்றும் 2 வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும். அதனுடன் கால் கப் துருவிய காய்ந்த தேங்காய் மற்றும் 1 ஸ்பூன் கசகசா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- தேங்காய் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- அதன்பின் நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் ஒரு தக்காளியைச் சேர்க்கவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். இந்த கலவை ஆறியதும், மென்மையான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- பின் அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் பாதியாக நறுக்கிய 4 வேகவைத்த முட்டைகளை அதில் வைக்கவும். அதில் மிளகாய் தூளைத் தூவி, மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுக்கவும்.
- அவற்றை மெதுவாகத் திருப்பிப் போட்டு, முட்டையின் மறுபக்கமும் மேலும் 3 நிமிடங்கள் வறுக்கவும்.
- முட்டைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
- பின் அதே எண்ணெயில், ½ ஸ்பூன் சீரகத்தைச் சேர்த்துப் பொரியவிடவும்.
- இப்போது, தயார் செய்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
- மிதமான தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும். பிறகு 1 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து மிதமான தீயில் சமைக்கவும்.
- பின்னர் ½ கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் தொடர்ந்து சமைக்கவும்.
- அடுத்து, வறுத்த முட்டைகளைச் சேர்த்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கடைசியாக 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய புதிய கொத்தமல்லித் தழையைத் தூவி, அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இது சூடான சப்பாத்தி, புரோட்டா அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
