Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
மீன் வாங்குனா வழக்கமான குழம்பு வைக்காம இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் குழம்பு வையுங்க...டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Kerala Style Meen Kulambu Recipe in Tamil: சிக்கன், மட்டனை விட மீனை விரும்பி சாப்பிடுபவர்கள்தான் பொதுவாக அதிகம் இருக்கிறார்கள். மீனை குழம்பு வைத்தால் ஒரு ருசி, அதேபோல வறுத்தால் ஒரு ருசி. ஆனால் இரண்டிலுமே மீன் சுவையாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஸ்டைலில் மீன் குழம்பு வைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒரு சுவையில் இருக்கும். ஆனால் கேரளாவில் வைக்கும் மீன் குழம்பு மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
சிலருக்கு கேரளா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாகத்தான் இருக்கும். ஏனெனில் கேரளாவில் மீன் அவ்வளவு வெரைட்டிகளிலும், வித்தியாசமான சுவையிலும் கிடைக்கும். நீங்களும் கேரளா ஸ்டைல் மீன் குழம்பை சுவைக்க விரும்பினால் அதற்கு கேரளவிற்குத்தான் போக வேண்டுமென்று அவசியமில்லை. அதற்கான சரியான பக்குவம் தெரிந்தால் உங்கள் வீட்டிலேயே அதை செய்யலாம்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் மீன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா மீன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ மீன்
- 10 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் கடுகு
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு
- 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 3 பூண்டு பல்
- சிறிதளவு புளி
- 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 3 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- கருவேப்பிலை சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மீனை நன்கு கழுவி வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்,
- தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்து விட்டு, தேங்காய்யை துருவி மற்றும் புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கடுகு, சீரகம், வெந்தயம், மற்றும் மிளகை போட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வறுக்கவும்.
- அடுத்து அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் 3 பல் பூண்டை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- தக்காளி குழைந்ததும் அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் 3 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து சரியாக ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- இதை நன்கு ஆற வைத்து அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.
- பின்னர் மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் பச்சை மிளகாயை போட்டு வதக்கி பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு கப் அளவு தண்ணீரை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் அதில் கரைத்து வைத்திருக்கும் புளிச்சாறை சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்த்து பக்குவமாக கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும்.
- 7 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து சிறிதளவு கருவேப்பிலை தூவி மீன் உடையாமல் ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கேரளா ஸ்டைல் மீன் குழம்பு ரெடி. இதை செய்து உங்களின் குடும்பத்தினரை அசத்துங்கள்.



Click it and Unblock the Notifications