Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தொப்பை, இடுப்பு கொழுப்பு வேகமா கரையணுமா? அப்ப காலையில இந்த கவுனி அரிசி பொங்கலை 1 கப் சாப்பிடுங்க..
Kavuni Arisi Pongal Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? நீங்கள் உங்கள் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க விரும்புகிறீர்களா? ஆனால் கடுமையான டயட்டில் இருக்க விருப்பமில்லையா? அப்படியானால் சரியான காலை உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
அதுவும் தொப்பை குறைய வேண்டுமானால், கருப்பு கவுனி அரிசியை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். அதற்கு அந்த அரிசியைக் கொண்டு கஞ்சி தான் செய்து சாப்பிட வேண்டும் என்பதில்லை, அந்த அரிசியைக் கொண்டு பொங்கலும் செய்து சாப்பிடலாம். இந்த பொங்கலை காலையில் 1 கப் உட்கொண்டு வந்தால், தொப்பை குறைந்து உடல் ஃபிட்டாக இருக்கும்.

உங்களுக்கு கருப்பு கவுனி அரிசியைக் கொண்டு எப்படி பொங்கல் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி அரிசி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கவுனி அரிசி - 200 கிராம்/1 டம்ளர்
* தண்ணீர் - 2 டம்ளர் + 2 டம்ளர்
* நெய் - 2 டீஸ்பூன்
* பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2
* நெய் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 15
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் கருப்பு கவுனி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
சுத்தமான நீரை 2 டம்ளர் ஊற்றி, குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, அரிசியில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் பாசிப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், பாசிப்பருப்பை மட்டும் சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள கவுனி அரிசியை சேர்த்து நன்கு 3 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரிசி ஊற வைத்த நீரை ஊற்றி, அத்துடன் 2 டம்ளர் நீரையும்
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், 1/2 டீஸ்பூன் நெய் மற்றும் 1/2
டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க
வேண்டும்.
* கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை முடி, குறைவான தீயில் வைத்து, 7-8
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் மிளகு, சீரகம் சேர்த்து பொரிய விட்டு, முந்திரியை
சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சுவையான கருப்பு கவுனி
அரிசி பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications