Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த வாரம் மீன் வாங்குனா இந்த மாதிரி காஷ்மீரி ஸ்டைலில் வறுத்து பாருங்க... கலர்புல்லா டேஸ்ட் அசத்தலா இருக்கும்!
Kashmiri Fish Fry Recipe in Tamil: அசைவ உணவுகளில் மீனுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மற்ற அசைவ உணவுகளை சாப்பிடாதவர்கள் கூட மீனை விரும்பி சாப்பிடுபவர்கள். அதற்கு காரணம் அதன் சுவையும், வாசனையும்தான். ஞாயிறு வந்தால் வாய்க்கு ருசியாக அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டால் தான் அந்த விடுமுறையை கொண்டாடிய சந்தோஷம் கிடைக்கும்.
இந்த ஞாயிறு உங்கள் வீட்டில் மீன் வாங்கினால், அதை ப்ரை செய்ய நினைத்தால், வழக்கமாக செய்யும் மீன் ப்ரையை செய்யாமல், ஒருமுறை காஷ்மீர் ஸ்டைலில் மீன் வறுவலை செய்து சாப்பிடுங்கள். நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மீன் வறுவலை விட வேற லெவல் சுவையில் இருக்கும்.

இந்த காஷ்மீர் ஸ்டைல் மீன் வறுவல் வழக்கமாக செய்வதை விட மிகவும் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும். சொல்லப்போனால் ஒருமுறை செய்து சாப்பிட்டால், இனிமேல் இப்படி தான் செய்து சாப்பிட விரும்புவீர்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும்.
உங்களுக்கு காஷ்மீர் ஸ்டைல் மீன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஷ்மீரி மீன் வறுவலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மீன் துண்டுகள் - 1 கிலோ
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- இஞ்சிப் பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- சோம்பு பொடி - ஒன்றரை டீஸ்பூன்
- சீரக பொடி - ஒன்றரை ஸ்பூன்
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- ரவை அல்லது அரிசி மாவு - 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் பொரிக்க - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மீனை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி வைக்கவும்.
- மீனை பொரிப்பதற்கு முதலில் அதனை நன்கு மேரினேட் செய்ய வேண்டும்.
- மீனை மேரினேட் செய்ய ஒரு வாயன்ற பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சிப் பூண்டு விழுது, சோம்பு பொடி, சீரக பொடி, கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு நன்கு கலக்கவும்.
- பின்னர் தேவையான அளவு ரவை அல்லது அரிசி மாவு சேர்த்து நன்கு கலக்கவும்,
- சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி சற்று கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும்.
- பேஸ்ட் தயாரானதும் மீன் துண்டுகளில் இந்த மசாலாவை நன்கு தடவி 45 நிமிடம் - 1 மணி நேரம் ஊற விடவும்.
- ஃப்ரிட்ஜில் வைப்பது இன்னும் நல்லது.
- மீனை வறுப்பதற்கு அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- மிதமான தீயில் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- இப்படி செய்தால் வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும்.
- உங்களுக்கு எண்ணெயில் வறுக்க பிடிக்குமென்றால் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கலாம்.
- பொரித்து எடுக்கும்போது மீனின் மேல் சிறிது காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் சோம்பு பொடி தூவி விடுங்கள். இதுதான் காஷ்மீர் மீன் வறுவலின் ஸ்பெஷலே.
- அவ்வளவுதான் எண்ணெயை வடிகட்டியவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை வைத்து பரிமாறவும்.



Click it and Unblock the Notifications