Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
காரைக்குடி கறிவேப்பிலை குழம்பு ரெசிபி... இத சாப்பிட்டா எடை வேகமாக குறையும், முடியும் நல்லா வளருமாம்...!
Karuveppilai Kulambu Recipe in Tamil: கடைகளில் சண்டை போட்டு வாங்குவதும், சாப்பிட அமர்ந்தவுடன் முதல் தனியாக எடுத்து வைப்பதும் கறிவேப்பிலையைத்தான். கறிவேப்பிலை அதன் வாசனைக்கும், தாளிப்பதற்கும் என்று மட்டுமே நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் கறிவேப்பிலையில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
துரதிர்ஷ்டவசமாக அது தெரிந்தாலும் நாம் அதை உட்கொள்ள விரும்புவதில்லை. இன்று இளைஞர்கள் இளம் வயதிலேயே வழுக்கை, இளநரை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக கறிவேப்பிலையை சாப்பிடாததும் ஒரு முக்கிய காரணமாகும்.

இதற்கு சிறந்த வழி கறிவேப்பிலையை சுவையான உணவாக சமைத்து சாப்பிடுவதுதான். சுவையான உணவுகள் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது செட்டிநாடு உணவுகள்தான். இந்த பதிவில் கறிவேப்பிலையை வைத்து சுவையான செட்டிநாடு கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- கறிவேப்பிலை - 1/2 கப்
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு -10 பல்
- தக்காளி - 1
- சாம்பார் பொடி - ஸ்பூன்
- மல்லி தூள் - 3 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- புளி சாறு - 1 கப்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- உளுந்து - 1 ஸ்பூன்
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- வெல்லம் - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து அதிலிருந்து 1 கப் சாறை
பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் வெந்தயத்தை
சேர்க்கவும்.
- கடுகு வதங்கியதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து
வதக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- கறிவேப்பிலை, தக்காளி, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், கொத்தமல்லி
தூள் ஆகியவற்றை நன்றாக விழுதாக அரைக்கவும். தேவைப்பட்டால் இதனுடன்
சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டு வதங்கியதும் அரைத்த விழுதை இதனுடன்
சேர்க்கவும்.
- இதை நன்கு கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். பச்சை
வாசனை போகும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இடையிடையே
கிளறி விடவும்.
- இப்போது புளித்தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் சிறிதளவு உப்பு
சேர்க்கவும்.
- குழம்பு பதம் வரும் வரை மிதமான தீயில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை
கொதிக்க விடவும். குழம்பை அடுப்பிலிருந்து இறக்கி வைக்குமுன் வெல்லம்
சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது அடுப்பை அணைத்தால் சூப்பரான கறிவேப்பில்லை குழம்பு
ரெடி!



Click it and Unblock the Notifications