Latest Updates
-
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..
அடுத்தமுறை வெறும் தோசை சுடாம.. கார முட்டை தோசையை செய்யுங்க.. சைடு டிஷ் எதுவும் வேண்டாம்..
Kara Muttai Dosa Recipe In Tamil: பெரும்பாலானோரின் வீடுகளில் காலை வேளையில் இட்லி அல்லது தோசை தான் காலை உணவாக இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படியென்றால், எப்போதும் ஒரே மாதிரி வெறும் தோசையை சுட்டு சட்னி செய்யாமல், அடுத்தமுறை கார முட்டை தோசையை செய்யுங்கள். முக்கியமாக இந்த கார முட்டை தோசைக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
மேலும் இந்த முட்டை தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகளும் இந்த தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கார முட்டை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார .முட்டை தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
கார சட்னி செய்வதற்கு...
* வரமிளகாய் - 20
* பூண்டு - 12 பற்கள்
* சின்ன வெங்காயம் - 15
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* புளி - ஒரு சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
கார முட்டை தோசை செய்வதற்கு...
* தோசை மாவு - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு
* கார சட்னி - தேவையான அளவு
* முட்டை
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம்,
கல் உப்பு, புளி மற்றும் மிளகாய் ஊற வைத்த நீரை சிறிது ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, அதில் அரைத்த சட்னியை
சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை
மாவைக் கொண்டு தோசை ஊற்ற வேண்டும்.
* பின் அந்த தோசையைச் சுற்றி நெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள கார
சட்னியை தோசையின் மேல் தடவி விட வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அடித்து வைத்துள்ள முட்டையை தோசையின் மேல் ஊற்றி பரப்பி, மேலே
சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், நறுக்கிய வெங்காயம் சிறிது,
கொத்தமல்லி சிறிது தூவி, நெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து,
திருப்பிப் போட்டு மீண்டும் சிறிது நேரம் வேக வைத்து இறக்கினால்,
சுவையான கார முட்டை தோசை தயார்.
Image Courtesy: Annai Samayal



Click it and Unblock the Notifications