Just In
- 1 hr ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 2 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 6 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மணமணக்கும்.. ருசியான... கனவா மீன் குழம்பு
இந்த வாரம் மீன் எடுக்க நினைத்தால் கனவா மீனை எடுங்கள். அந்த கனவா மீனைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த கனவா மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபம்.
விடுமுறை நாட்களில் நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் வகையில் பல சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிட அனைவருமே விரும்புவோம். நீங்கள் இந்த வாரம் மீன் எடுக்க நினைத்தால் கனவா மீனை எடுங்கள். அந்த கனவா மீனைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த கனவா மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபம். 15 நிமிடத்தில் மணமணக்கும் ருசியான கனவா மீனை செய்துவிடலாம். முக்கியமாக இந்த குழம்பு பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது.
உங்களுக்கு கனவா மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கனவா மீன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்த செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கனவா மீன் - 250 கிராம்
தேங்காய் மசாலாவிற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* சின்ன வெங்காயம் - 6 (நறுக்கியது)
* மல்லி விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 12
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் கனவா மீனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக ரோஸ்ட் செய்து, அத்துடன் மல்லி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கனவா மீனை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைகேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து, 15-20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கனவா மீன் வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான கனவா மீன் குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi