Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காலையில் இந்த கஞ்சியை 1 கப் குடிச்சா.. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.. டேஸ்டியாவும் இருக்கும்..
Kambu Vegetable Kanji In Tamil: எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போடித்துவிட்டதா? சற்று லைட்டான காலை உணவை எடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கஞ்சி தான் சிறந்ததாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் கம்பு இருந்தால், அட்டகாசமான சுவையில் கம்பு வெஜிடேபிள் கஞ்சியை செய்யலாம்.
முக்கியமாக இந்த கஞ்சி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் உள்ள காய்கறிகளே போதுமானது. மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த கஞ்சியை டயட்டில் இருப்பவர்கள் குடித்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் செயல்படலாம்.

உங்களுக்கு கம்பு வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு வெஜிடேபிள் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கம்பு - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
கஞ்சிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 ()
* ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் கழுவிய கம்பை சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் பொடித்த கம்பை சேர்த்து, அத்துடன் 3 கப் நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி, மிதமான தீயில்
வைத்து, 2 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் ஸ்வீட் கார்ன்னை
சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5
நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்ததும், குக்கரைத் திறந்து, வேக வைத்துள்ள
கம்புடன் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த வெஜிடேபிள் நீரை அப்படியே
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு
கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கம்பு
வெஜிடேபிள் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications