Latest Updates
-
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Kambu Roti With Thakkali Chutney Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கம்பு மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கம்பு மாவு கொண்டு ரொட்டி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னியை செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கம்பு ரொட்டி மற்றும் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு ரொட்டி மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கம்பு ரொட்டிக்கு...
* கம்பு மாவு - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு
தக்காளி சட்னிக்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* பெரிய தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் எண்ணெய் ஊற்றி கலந்து விட வேண்டும்.
* அடுத்து அதில் கொதிக்கும் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி,
கரண்டியால் கிளறி விட வேண்டும். இப்படி சுடுநீரை ஊற்றும் போது மாவு
ஓரளவு வெந்துவிடும்.
* மாவானது ஓரளவு கைப்பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள ரொட்டிகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும்
பொன்னிறமாக வேக வைத்து, கடைசியாக மேலே இரண்டு பக்கமும் நெய் தடவி
ஒருமுறை திருப்பிப் போட்டு எடுத்தால், கம்பு ரொட்டி தயார். இவ்வாறு
நெய் தடவும் போது ரொட்டி மென்மையாக இருக்கும்.
* அடுத்து தக்காளி சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்
மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சாம்பார் தூள் சேர்த்து கிளறி பச்சை வாசனை போக வதக்கி
இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து, 1/2 கப் நீரை ஜாரில் ஊற்றி
அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து, 2 கொதி விட்டு இறக்கினால், சுவையான
தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
