Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
தினமும் இட்லி தோசைக்கு பதிலா 1 கப் கம்பு மாவு இருந்தா 10 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க..
Kambu Adai Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி தோசை என்றாலே அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்களா? அப்படியானால் கோடை வெயிலுக்கு இதமாகவும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரும் வகையில் கம்பு கொண்டு ஒரு அசத்தலான காலை உணவை செய்யுங்கள். அது தான் கம்பு அடை.
இந்த கம்பு அடைக்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். ஒருவேளை சைடு டிஷ் வேண்டுமானால், கார சட்னி, தக்காளி சட்னி போன்றவை நன்றாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கம்பு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கம்பு மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 1 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன் (லேசாக பொடித்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை
மிளகாய், சீரகம், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரில் கழுவிய
முருங்கைக்கீரையை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்னர அத்துடன் சீரகம், கரம் மசாலாத் தூள், தயிர், பொடித்த மிளகு
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் கம்பு மாவு மற்றும் கோதுமை மாவை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, பிசைந்த மாவை ஒருமுறை
பிசைந்து, சிறிது எடுத்து உருண்டையாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாழை இலை அல்லது பாலிதீன் கவரை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, இந்த உருண்டையை வைத்து நன்கு மெல்லிசாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
எண்ணெய் சிறிது ஊற்றி தட்டி வைத்துள்ளதை போட்டு மிதமான தீயில் வைத்து,
எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால்,
சுவையான கம்பு அடை தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications








