Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி?
இந்திய டிசர்ட் வகைகள் எல்லாருக்கும் விருப்பமான விருந்தாக உள்ளது. எல்லாரும் இதை மனதார விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த டிசர்ட் வகையான உணவை தயாரிப்பது மிகவும் எளிது.
இந்திய டிசர்ட் வகைகள் எல்லாருக்கும் விருப்பமான விருந்தாக உள்ளது. எல்லாரும் இதை மனதார விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த டிசர்ட் வகையான உணவை தயாரிப்பது மிகவும் எளிது. இதற்கு அடிப்படையான பொருள்கள் என்று பார்த்தால் பால் பொருட்கள் மட்டுமே.
ரெம்ப வருடங்களாக ஆராய்ச்சி செய்து நமது செஃப் ஒரு வித்தியாசமான டேஸ்டியான ஹாஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக்கை தயாரித்து உள்ளனர். இந்த டிசர்ட்டில் ராப்ரி ரெசிபி அடங்கியது தான் இதன் முக்கியமான சிறப்பாக உள்ளது.

இது கண்டிப்பாக எல்லார் மனதையையும் கொள்ளை அடித்து விடும். அது மட்டுமா சாப்பிட சாப்பிட தெகட்டாத ஒரு உணவாகவும் இது இருக்கும். இதன் சுவையில் மெய் மறந்து போவீர்கள். இதை வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு இதன் சுவை உங்களை ஈர்த்து விடும்.
சரி வாங்க இந்த காஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக்கை நம்ம செஃப் விஷால் அட்ரியா எப்படி செய்கிறார் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
Recipe By: செஃப் விஷால் அட்ரியா மற்றும் செஃப் ஜேடபிள்யூ மாரிடேட்
Recipe Type: டிசர்ட்
Serves: 5
-
காஜூ கத்லி - 7-10 துண்டுகள்
க்ரீம் சீஸ் - 1 கப்
ராப்ரி - 1 கப்
சர்க்கரை - 1 கப்
முட்டை - 4
ஏலக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
நன்றாக அடித்த க்ரீம்- (அலங்கரிக்க)
-
ஒரு கேக் செய்யும் ஸ்பிரிங் பாட்டம் அச்சு பாத்திரத்தை எடுத்து அதில் சில்வர் தகடு பேப்பரை விரித்து அதன் மேல் சீஸ் கேக்கை வைக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு ஸ்ட்ரேயை எடுத்து அதில் சீஸ் கேக் வைக்கப்பட்ட அச்சு பாத்திரத்தை வைக்கவும்.
ஒரு தட்டு முழுவதும் காஜூ கத்லியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது காஜூ கத்லியை சீஸ் கேக்கின் மேல் வரிசையாக வைக்க வேண்டும்.
ஒரு பெளலில் சீஸ் க்ரீமை எடுத்து கொள்ளவும்
அதனுடன் ராப்ரியை சேர்க்கவும்
அதனுடன் முட்டை, சர்க்கரை, மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்க்கவும்
இப்பொழுது அதனுடன் மைதா மாவை சேர்க்கவும். நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்
இந்த க்ரீம் உள்ள கலவையை ட்ரேயின் மீது உள்ள காஜூ கத்லி மீது ஊற்றவும்.
இப்பொழுது அந்த ஸ்ட்ரேயில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கேக்கை 150 டிகிரி செல்சியஸ் அளவில் ஒரு மணி நேரத்திற்கு ஓவனில் வைத்து பேக் பண்ண வேண்டும்.
பிறகு ஒரு மணி நேரம் கழித்து ஓவனிலிருந்து எடுக்க வேண்டும்
அறை வெப்பநிலை வரும் வரை வெளியில் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு அந்த கேக் அமைப்பை 2-3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும்
பிறகு பிரிட்ஜிலிருந்து எடுக்கவும்
பிறகு கேக்கை மட்டும் அச்சுப் பாத்திரத்தில் இருந்து தனியாக எடுத்து துண்டுகளாக வெட்டவும்.
பிறகு கேக் துண்டுகளை ப்ரஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.
ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
சுவையான காஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக் ரெடி
- க்ரீம் சீஸ் பேட்டர் கலவையை அரை மணி நேரம் ரூம் வெப்பநிலையில் வைத்து இருந்தால் மிகவும் மென்மையாக மாறி விடும்.
- பரிமாறும் அளவு - 1 துண்டு
- கலோரிகள் - 692 கலோரிகள்
- கொழுப்பு - 58 கிராம்
- புரோட்டீன் - 18 கிராம்
- கார்போஹைட்ரேட் - 34 கிராம்
- சர்க்கரை - 9 கிராம்
- நார்ச்சத்து - 6 கிராம்



Click it and Unblock the Notifications











