Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
காலையில் இட்லி, தோசை செஞ்சு போரடிச்சுருச்சா? அப்ப ஜவ்வரிசி வெச்சு இப்படி உப்புமா செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Javvarisi Upma Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சுருச்சா? சற்று வித்தியாசமான காலை டிபனை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் நைலான் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் உப்புமா செய்யுங்கள்.
இதுவரை நீங்கள் உப்புமா என்றாலே தலைத்தெறிக்க ஓடுபவரானால், இந்த உப்புமாவை சுவைத்தால், யாருக்கும் கொடுக்காமல் நீங்களே காலி செய்வீர்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த உப்புமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நைலான் ஜவ்வரிசி - 1 கப்
* தயிர் - 1 கரண்டி
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் நைலான் ஜவ்வரிசியை நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 கரண்டி தயிரை சேர்த்து, சற்று தாராளமாக ஜவ்வரிசியில்
நீரை ஊற்றி, குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். காலையில்
செய்வதாக இருந்தால், முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் ஒரு வாணலியில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, நீரை ஊற்றி,
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,
வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து
நன்கு கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* ஒருவேளை ஜவ்வரிசி வேகாமல் இருந்தால், சிறிது நீரைத் தெளித்து கிளறி,
மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக
வைத்து, இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஜவ்வரிசி உப்புமா
தயார்.



Click it and Unblock the Notifications