Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
1 கப் ஜவ்வரிசியும், 1/2 கப் வேர்க்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க...
Javvarisi Kozhukattai Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று புதுமையான காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசியும், வேர்க்கடலையும் உள்ளதா? அப்படியானால் அவ்விரண்டையும் கொண்டு கொழுக்கட்டை செய்து சாப்பிடுங்கள்.
இந்த கொழுக்கட்டை சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த ஜவ்வரிசி கொழுக்கட்டையை காலை டிபனாக மட்டுமின்றி, மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். ஒருவேளை இதற்கு பெஸ்ட் சைடு டிஷ் என்றால், அது தேங்காய் சட்னி தான். இந்த ஜவ்வரிசி கொழுக்கட்டை பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நைலான் ஜவ்வரிசி - 1 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 கப்
* பச்சரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஜவ்வரிசியை
சேர்த்து நிறம் மாற வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து சிறிது நேரம் வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை
சேர்த்து நன்கு அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் வேர்க்கடலையில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும்.
* பிறகு ஈரப்பதமில்லாத மிக்சர் ஜாரில் வறுத்த ஜவ்வரிசி மற்றும் தோல்
நீக்கிய வேர்க்கடலையை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த ஜவ்வரிசி மாவை போட்டு, அத்துடன்
அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து, அதோடு கொத்தமல்லி மற்றும்
சிறிது உப்பு சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன் 3 டேபிள்
ஸ்பூன் பச்சரிசி மாவை சேர்த்து, லேசாக நீரை தெளித்து தெளித்து,
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு கையில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை சிறிது எடுத்து, உருளை
வடிவில் உருட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து
மாவையும் உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டை வைத்து மூடி, 10 நிமிடம்
வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும் சத்தான ஜவ்வரிசி கொழுக்கட்டை
தயார்.



Click it and Unblock the Notifications