Latest Updates
-
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க..
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில இப்படி இட்லி செய்யுங்க.. இட்லி பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Javvarisi Idli Recipe In Tamil: காலையில் எப்பவும் ஒரே மாதிரி இட்லி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான இட்லியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு இட்லி செய்து சாப்பிடுங்கள்.
இந்த ஜவ்வரிசி இட்லி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். மேலும் இந்த ஜவ்வரிசி இட்லிக்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நைலான் ஜவ்வரிசி - 1/2 கப்
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 1 பெரிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* ரவை - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப் + தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஜவ்வரிசியை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும். காலையில் இட்லி சுடப்போகிறீர்கள் என்றால், இரவிலேயே
ஊற வைக்க வேண்டும். அதேப் போல் இரவு இட்லி என்றால், காலையில் ஊற
வைக்கலாம்.
* 8 மணிநேரம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பொடியாக
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்த வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தேங்காய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, சிறிது
உப்பு தூவி நன்கு வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ரவையை சேர்த்து நன்கு 5 நிமிடம் வறுத்து இறக்கி, ஒரு
பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து, கொத்தமல்லியைத்
தூவி,நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, முதலில் 1/4 கப்
நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில் இந்த கலவையை குழிகளில் ஊற்றி, இட்லி
பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
ஜவ்வரிசி இட்லி தயார்.



Click it and Unblock the Notifications